வெற்றி மாறன், தனுஷ் இணைந்து தயாரிக்கும் 'காக்கா முட்டை!!!

Friday,31st of May 2013
சென்னை::'எதிர் நீச்சல்' படத்தையடுத்து தனுஷ் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு 'காக்கா முட்டை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வொண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films) என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் தனுஷ், அதன் மூலம் 'எதிர் நீச்சல்' படத்தை தயாரித்தார். புதுமுக இயக்குநர் இயக்கத்தில் உருவான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. முதல் முயற்சியே அமோக வெற்றி பெற்றிருப்பதால், மிகுந்த சந்தோஷமும், உற்சாகமும் பெற்ற தனுஷ், இனி தொடர்ந்து பல புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று அறிவித்தார்.

அதன்படி, தற்போது தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்தை அறிவித்துள்ளார். 'காக்கா முட்டை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தனுஷுடன் இணைந்து இயக்குநர் வெற்றி மாறனும் தயாரிக்கிறார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை எம்.மணிகண்டன் இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவும் இவரே. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இப்படத்தைப் பற்றிய முழு விபரமும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Comments