ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு!!!

Sunday,19th of May 2013
சென்னை::செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள "கோச்சடையான்" படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்போவதாக முன்பு அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவை மாற்றிவிட்டார். படவிழாவில் வெளியிடுவதை விட, தனது படங்களுக்கு வரவேற்பு இருக்கும் ஒரு வெளிநாட்டில் ஆடியோ நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினால் படத்திற்கும் பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே என முடிவு செய்து, எந்த நாட்டில் நடத்தலாம் என்று யோசித்தாராம் ரஜினி.

அப்போதுதான், தனது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் ஜப்பான் நாட்டில் ஆடியோ வெளியீட்டை நடத்தினால் சிறப்பாக இருக்குமே என்று முடிவெடுத்தாராம். அதன்காரணமாக, ஜப்பானின் டோக்கியோ நகரில் கோச்சடையான் ஆடியோ விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாம். ஏற்கனவே ரஜினி நடித்த முத்து, படையப்பா, சிவாஜி உள்ளிட்ட பல படங்கள் ஜப்பான் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்ததாம்.. அதனால் ஜப்பான் ரசிகர்கள் எப்போதுமே ரஜினிக்கு ஸ்பெசலாம்.

Comments