Wednesday,29th of May 2013
சென்னை::எதிர் நீச்சல்’ படத்தின் நாயகி பிரியா ஆனந்த் அவரது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.
‘வாமனன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அடுத்து இவர் நடித்த 180 படமும் தோல்விப் படம்தான். தொடரந்து இரண்டு தோல்விப் படங்களில் நடித்தாலும் தமிழில் திடீரென சில படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இவற்றில் முதலில் வெளிவந்த ‘எதிர் நீச்சல்’ வெற்றிப் படமாக அமைந்து விட்டது. அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுக்கும் அவருடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார் என்று பேசப்படுகிறது.
பேரு ‘பிரியா’ ன்னு இருக்கிறதால ‘ஃப்ரீயா’ நடிச்சு கொடுக்க முடியுமா என்ன? சான்ஸ் கிடைக்கும் போது சம்பாதிச்சாதான உண்டு
Comments
Post a Comment