Monday,27th of May 2013
சென்னை::எத்தனை துன்பங்கள் இருந்தாலும் தொழிலில் அக்கறையும், பக்தியும் கொண்ட ஒரு நடிகர் உண்டென்றால் அவர் நடிகர் அஜித்தான்.
படப் பிடிப்பின் போது காலம் கடத்தும் ஒவ்வொரு நிமிஷத்துக்காக விரையமாகும் செலவு என்ன என்பதை உணர்ந்தவர் அவர். அதனால் தன்னால் முடிந்த அளவுக்கு படப் பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்து கொள்வார்.
தயாரிப்பாளருக்கு தன்னால் நஷ்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அப்படி சமீபத்தில் ‘வலை’ படத்துக்கான சூட்டிங் குலுமணாலியில் நடந்து கொண்டிருக்கிறது.
டெல்லியில் இருக்கும் அஜித் படப் பிடிப்பு நடக்கும் குலுமணாலிக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும். உடனடியாக பைக் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, கரெக்டாக சூட்டிங்கில் கலந்து கொண்டார். இதற்காக பைக்கில் பயணமான தூரம் 550 கிலோ மீட்டர். இதை ஒன்பது மணி நேரத்தில் கடந்துள்ளார்.
Comments
Post a Comment