முதல் இடம் என்பது நிரந்தரம் அல்ல - தமன்னா!!!

Friday,17th of May 2013
சென்னை::தமிழ் சினிமாவை மறந்த தமன்னா, இந்த ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவாருவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது அஜீத்துக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள தமன்னா, கடந்த 2012ஆம் ஆண்டின் அதிகம் கவர்ந்த பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் முதல் இடம் பிடித்துள்ளார்.

இத பற்றி தமன்னா கூறுகையில், "என் தோற்றம் என்பது இல்லாமல் சினிமாவில் எப்படி நடிக்கிறேன் என்பதை வைத்து முதலிடத்துக்கு என்னை தேர்வு செய்துள்ளனர். குடும்ப பாங்காகவும், ஜாலியான கேரக்டர்களிலும் நடித்து வருகிறேன். கல்லூரி, அயன், பையா போன்ற படங்களில் அத்தகைய கேரக்டரில் நடித்து உள்ளேன். ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் எனக்கு நிறைய இருக்கிறார்கள்.

நடிகர்களில் எனக்கு ஹிருத்திக் ரோஷனை பிடிக்கும். நான் அவருடைய ரசிகை. சூர்யா, விஜய், ஜெயம் ரவி போன்றோர் பிரமாதமாக நடிக்கின்றனர். அவர்களையும் எனக்கு பிடிக்கும். ரசிகர்கள் எனது கட்அவுட்களுக்கு பூஜை, பால்அபிஷேகம் செய்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இந்த மரியாதைகள் நிரந்தரம் அல்ல என்று எனக்கு தெரியும்.

இது வரும் போகும். தமிழில் அஜீத்துடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்த வருடம் அப்படம் ரிலீசாகும். பட உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இன்று நான் இருக்கிறேன். நாளை வேறொருத்தர் வருவார். முதல் இடம் என்பது நிரந்தரமானது அல்ல." என்று தெரிவித்தார்.

Comments