சென்னை::விஜய் நடித்து வரும், "தலைவா படத்தின் படப் பிடிப்பு, மும்பையில் துவங்கி, ஆஸ்திரேலியாவில் முடிந்துள்ளது. இதையடுத்து, "ஜில்லாவுக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் விஜய்.இந்நிலையில், "தலைவா படப்பிடிப்பு, "இத்தனை சீக்கிரம் முடிந்து விட்டதே என்று, கவலைப் படுகிறாராம், அப்பட நாயகியான அமலா பால்."விஜயுடன் நடித்த அனுபவத்தை,என்னால் மறக்கவே முடியாது. ஒட்டு மொத்த படக் குழுவும், ரொம்ப ஜாலியாக பழகினர். அந்த வகையில், "தலைவா படக்குழுவை, ரொம்பவே மிஸ் பண்ணப் போகிறேன் என்கிறார். மேலும், அவர், "இப்படத்தில், எனக்கு மரத்தை சுற்றி டூயட் பாடும் வழக்கமான வேடமில்லை. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். விஜய் படத்தில், இப்படியொருவேடம் கிடைத்தது சந்தோஷமாக உள்ளது என்கிறார்.
Comments
Post a Comment