Thursday,2nd of May 2013
சென்னை::மோசடி புகார்களில் சிக்கியுள்ள நடிகர், "பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது, குண்டர்
சட்டம் பாய வாய்ப்புள்ளதால், திரைப்பட இயக்குனர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆந்திர
தொழிலதிபருக்கு, 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய்
மோசடி செய்தது தொடர்பாக, கடந்த, 26ம் தேதி, "பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது
செய்யப்பட்டார். இதேபோல், ஏராளமானோரிடம், மோசடி செய்துள்ளதாகப் புகார்கள் வந்த
வண்ணம் உள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் முதல், "பவர் ஸ்டார்' சீனிவாசனிடம்,
போலீஸ் காவலில், விசாரணை நடைபெற்று வருகிறது. மோசடி புகார்கள் குவிவதால், அவர் மீது
குண்டர் சட்டம் பாய்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால், புதுப்படங்களில்
அவரை ஒப்பந்தம் செய்த, திரைப்பட இயக்குனர்கள் தவிப்பில் உள்ளனர். அவரை படத்தில்
இருந்து நீக்க, முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments
Post a Comment