Wednesday,8th of May 2013
சென்னை::பாலா இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலாவின் 'பரதேசி' படம் சமீபத்தில் ரிலீசானது. அடுத்த படத்துக்காக கதையை தற்போது தயார் செய்துள்ளார். இதில் விக்ரம் நடிக்க பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் 'சேது', 'பிதாமகன்' படங்களில் விக்ரம் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது தடவையாக இருவரும் இணைகின்றனர்.
விக்ரம் தற்போது ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு பாலா படத்துக்கு வருகிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் செழியன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment