Wednesday,15th of May 2013
சென்னை::வித்தியாசமான வேடம் இருந்தால் நடிக்கிறேன் என்று பசுபதி சொன்ன பிறகு தமிழில் அவருக்கு படங்களே இல்லை. வருகிற ஒன்றிரண்டையும் கதை கேட்டு, கேரக்டர் கேட்டு தயவுதாட்சண்யம் இல்லாமல் நிராகரித்துவிடுகிறார்.
மலையாளத்தில் அழைத்தால் மட்டும் பசுபதி மறுப்பதில்லை. கேரக்டர் வெயிட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை
தெலுங்கு, தமிழில் தயாராகும் கஹானி ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சேகர் கம்முலா இயக்கும் இந்தப் படத்தில் வித்யாபாலன் நடித்த கர்ப்பிணி பெண் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் பசுபதிக்கு அநேகமாக போலீஸ் அதிகாரி வேடமாக இருக்கலாம் என்கிறார்கள். வைபவ் இளம் போலீஸ்காரராக நடிக்கிறார்.
Comments
Post a Comment