சினிமா தொழிலாளர் பிரச்னை : விஷால், கார்த்தி ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!!!

Tuesday,28th of May 2013
சென்னை::சினிமா தொழிலாளர் பிரச்னை காரணமாக நடிகர்கள் விஷால், கார்த்தி நடிக்கும் படம் உள்பட 26 படங்களின் ஷூட்டிங் இன்று தடைபட்டது.
திரைப்பட கார் ஓட்டுனர்கள் சங்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினர்  நேற்று இரவு மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோடம்பாக்கம் போலீசில் புகார் தரப்பட்டது. இந்நிலையில் டிரைவர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இன்று நடப்பதாக இருந்த விஷாலின் பட்டத்து யானை, கார்த்தியின் பிரியாணிஆகிய படங்களின் ஷூட்டிங் உள்பட 26 பட ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் கோடம்பாக்கம் டைரக்டர் காலனியில் உள்ள டெக்னீஷியன் சங்க கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர்.
இது பற்றி பெப்சி இணை செயலாளர் தனபாலன் கூறும்போது, ‘என்னையும் பெப்சி பொருளாளர் அங்கமுத்து சண்முகம் உள்ளிட்டவர்களையும் சிலர் நேற்று தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும்‘ என்றார்.

Comments