Tuesday,28th of May 2013
சென்னை::பாஸ் நடிக்கும் ‘தலைவன்’ பாடல் வெளியீட்டு விழா
புளூ ஓசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சித்திரைச்செல்வன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘தலைவன்’.திரைப்பட கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில், புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா படேல் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம், கோவைசரளா, சந்தானபாரதி, பாண்டு, சுமன்ஷெட்டி, மனோபாலா, வின்சென்ட் அசோகன், முத்தூக்காளை, அபிஷேக், ஓ.ஏ.கே.சுந்தர், டி.பி.கஜேந்திரன், ரவிராஜ். வாசுவிக்ரம், சுவாமிநாதன், கணேஷ், ஆர்த்தி, ரவி, ஜெயபிரகாஷ், மீராகிருஷ்ணன், மோனிகா, கூல் சுரேஷ், அந்தோணிராஜ், கிரி, வி.டி.வி.கணேஷ், மூணார் ராஜேஷ், ஸ்வேதா, பவர் ஸ்டார், சுமன், ஷோபா, கோட்டா சீனிவாசராவ், சுப்புராஜ், சுரேஷ்கிருஷ்ணன், வஞ்சிநாதன், மதியழகன், ராயபுரம் ரவி, யுவராணி உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜேசுதாஸ், உதித் நாராயணன், கார்த்திக், ரஞ்சித் என்று முன்னணி பாடகர்களை பட வைத்து இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர். பாடல்கள் அனைத்தும் தாரத்தோடும், ரசிகர்களின் உள்ளத்தை தொடுகிற மாதிரியும் கவிஞர் அறிவுமதி, யுக பாரதி, விவேகா, மதன் கார்க்கி ஆகியோர் எழுதி உள்ளானர். கே.எஸ்.பூபதி ஒளிப்பதிவு செய்ய ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். கலை – சண்முகம். சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், நடனம் –சங்கர், விஜய், தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர், மலைச்சாரல் ரவி. கம்பெனி மேனஜர் அக் ஷய் மனோகர்,

தலைவன் இசை வெளியீட்டு விழா
இந்த படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழா நேற்று (27.05.2013) திங்கள் மாலை 5.00 மணிக்கு சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவுக்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அமீர் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் தயாரிப்பாளர் கில்டு தலைவர் ஹெம்நாத் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
படத்திற்கு உழைத்த டெக்னீஷியன்களும், தொழிலாளர்களும் பாடல் சிடியை வெளியிட பூந்தமல்லி அசோக், பண்ருட்டி பாபு, ஞானி, சரவணன் ஆகியோர் ரசிகர்கள் சார்பில் பெற்றுக்கொண்டனர்.
ஹீரோக்கன் பாஸ் இடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.தலைவன் இயக்குநர் ரமேஷ்செல்வன் அதிரடி.ஆரவாரமாக, ஆர்ப்பாட்டமாக, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற தலைவன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசுகையில், இது எனக்கு நான்காவது படம், உளவுத்துறை, ஜனனம், கலவரம் படத்தைத் தொடர்ந்து தலைவன் நான் இயக்குகிற நான்காவது படம்.
இந்த படத்தில் பெரிய குடும்பத்து வாரிசான பாஸ்-ஐ நடிக்க வைக்க முடிவு செய்தபின், கொஞ்சம் சந்தேகத்தோடு தான் படப்பிடிப்புக்கு கிளம்பினேன். ஆனால் பாஸ் புதிதாக நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறவர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ, அவ்வளவு பணிவோடும் மரியாதையோடும் எளிமையாகவும் நடந்து கொண்டார்.
அதைவிட மிகமுக்கியமாக பாஸ் 3 செல்போன்கள் வைத்திருந்தாலும், ஸ்பாட்டில் இதுவரை ஒருநாள் கூட செல்போன் பேசியதே இல்லை. அதைப்போல சொந்தக்காரர்கள் என்ற பெயரிலோ, நண்பர்கள் என்ற பெயரிலோ ஒருவரைக்கூட ஸ்பாட்டுக்கு அழைத்து வரவில்லை. தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் கூட பாஸ் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது, அப்படி இருந்தும் பாஸ் ஒரு நாயகனாக நடந்துகொண்ட விதம் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது,
இன்றைய ஹீரோக்கள் பலர் ஸ்பாட்டில் செல்போனில் லவ் பண்ணுகிறார்கள். அல்லது குடும்ப பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக இன்றைய ஹீரோக்கள் பாஸ் இடம் இந்த நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். ஸ்பாட்டில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களும் இம்சை தராமல் இருங்கள்.
இந்த வருடத்தில் மிகச்சிறந்த கமர்சியல் காமெடிகள் பாஸ் படத்தின் காமெடி காட்சிகள் முதல் இடத்தில் இருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆண்டவன் அனுப்பிய தலைவன் தான் “பாஸ்”!
இந்த வருடத்தில் மிகச்சிறந்த கமர்சியல் காமெடிகள் பாஸ் படத்தின் காமெடி காட்சிகள் முதல் இடத்தில் இருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆண்டவன் அனுப்பிய தலைவன் தான் “பாஸ்”!
தலைவன் இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சித்திரைச்செல்வன் பேசுகையில், மேடையில் பேசும்போது ஒன்று தெரிந்ததைச்சொல்லவேண்டும், அல்லது தெரியாததை சொல்லவேண்டும். நான் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அஞ்சலி படத்தில் ஒரு காட்சி வரும். அதில் அஞ்சலிக்கு அண்ணனா நடித்திருக்கும் பையன் அம்மா ரேவதியிடம், இந்த தங்கச்சி எனக்கு வேண்டாம்மா, இவ எனக்கு தங்கச்சியா பொறந்தா, சுரேஷ்க்கு தங்கச்சியா பொறந்திருக்கலாம்ல என்று கேட்பான். அதற்கு அம்மா, நம்ம தங்கச்சிக்கு உடம்பு சரியில்லை. அப்படி உடம்பு சரியில்லாத தங்கச்சிய பாத்துக்கணும்னா அதுக்கு ஒரு நல்ல அண்ணன் வேணும். அதனால தான், ஆண்டவன் அஞ்சலிக்கு அண்ணனா உன்னை தேர்ந்தேடுக்கிறார் என்பார்.
அதைப்போல தமிழ் சினிமாவின் தொழிலாளர்களை நேசிக்க, ஆண்டவனே அனுப்பி வைத்த தலைவன் தான் நம்ப பாஸ். சினிமாக்காரர்களின் தலைவன் தான் இந்த பாஸ். கண்டிப்பா, தலைவன் படம் மிகப்பெரிய மாஸ் கமர்சியல் படமா வெற்றி பெறும் என்று கூறி விடைபெறுகிறேன்.பாஸ் எதற்காக சினிமாவிற்கு வந்திருக்கிறாரோஅது நடக்க நான் வாழ்த்துகிறேன்.

தலைவன் பாஸ்-க்கு பெப்சி தலைவர் அமீரின் பாராட்டு!
தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் சங்க செயலாளரும் பெப்சி தலைவருமான இயக்குநர் அமீர் பேசுகையில், இது இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியல. ஒரு மாநாடு மாதிரி இருக்குது. முதன்முதலாக ஒரு இசை வெளியீட்டு விழா மாநாடு மாதிரி நடக்கிறதைப் பார்க்குப்போது சந்தோசமாக இருக்கிறது.
தொழிலாளர்களே இந்த படத்தின் இசையை வெளியிடப்போகிறார்கள் என்று தகவல் அறிந்ததும் நானும் ஜனநாதனும் இந்த விழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி வந்தோம்.
தொழிலாளர்களை நேசிக்கவேண்டும் என்ற சிந்தனை மக்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமே வரும். எனக்குத் தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். அதன் பிறகு இப்போது இளைய தளபதி விஜய் தலைவா என்று ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்போது 3வது தலைவனாக பாஸ் வந்திருக்கிறார்.
பணம் எல்லார்கிட்டயும் இருக்கும். பணம் இருக்கிறவங்க விழா நடத்துனா, அவங்களுக்கு நெருக்கமானவங்க, சொந்தக்காரங்க, வேண்டப்பட்டவங்களை மேடையில உட்கார வைப்பாங்க. ஆனா இங்க பணம் இருக்கிற ஒருத்தர்கிட்ட குணமும் இருக்கிற பார்க்கிறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு.
பாஸ் சினிமாவிற்கு எதை நினைத்து வந்திருக்கிறாரோ அது நிறைவேற வாழ்த்துகிறேன் என்றார் அமீர்.
பாஸ் சினிமாவிற்கு எதை நினைத்து வந்திருக்கிறாரோ அது நிறைவேற வாழ்த்துகிறேன் என்றார் அமீர்.
என் உடலிலும் உயிரிலும் கலந்து விட்ட
எ
ன் அன்பு ரசிகர்களே….தலைவன் விழாவில் தலைவன் பாஸ் பேச்சு!
என் மீது அன்பும் ஆதரவும் வைத்து எனது முதல்படத்திலேயே என்னை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்த, என் உடலிலும் உயிரிலும் கலந்துவிட்ட என் அன்பு ரசிகர்களே, இந்தப்படத்தை சித்திரைச்செல்வன் சாரும் ரமேஷ்செல்வன் சாரும் பெரிய அளவில எடுத்திருக்காங்க. அதை விட பெரிசா இந்தப்படம் வெற்றி பெறப்போகுது. அதுக்கு காரணமாக இருக்கப்போறதும் என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் தான்.
இந்தப்படத்தின் இன்றைய விழா நாயகன் வித்யாசாகர் சார் தான். அழகா அஞ்சு பாட்டு தந்திருக்கார். (நல்லாருக்குல்ல, என்று ரசிகர்களைப்பார்த்து கேட்க, ஓவென சத்தமிட்டும் விசிலடித்தும் அரங்கத்தை அதிர வைத்தார்கள்.) ரமேஷ் சார் கிட்டயும் சித்திரை சார்கிட்டயும் படத்தோட இசையை தொழிலாளர்களை வைத்து வெளியிடலாமா என்று உடனே சரி என்று சம்மதித்தார்கள். ஏன்னா, வெயில் மழை பாராமல் இரவு பகலா தொழிலாளர்களின் உழைப்பில தான் ஒரு சினிமா உருவாகுது, அவங்களை கௌரவிக்கணும், அவங்களை மேடை ஏததணும். அவங்கதான் அஸ்திவாரம். அவங்க முன்னாடி தான் இந்த இசைவெளியீடு நடக்கணும், அவங்க ஒருபக்கம்னா இன்னொர பக்கம் இந்த படத்தை பெரிய அளவுல கொண்டு போய் சேர்த்த என்னுடைய ரசிகர்கள் நீங்க ஒரு பக்கம். உங்களை வச்சித்தான் இந்த விழா நடக்கணும்னு சொன்னேன். அதை அவங்களும் ஒரு மனதோட ஏத்துக்கிட்டாங்க. அதன்படிதான் இந்த விழா இப்படி நடந்துகொண்டிருக்கிறது.
இந்த விழாவில் உங்களுடைய அன்பையும் ஆரவாரத்தையும் பார்க்கும்போது எனக்கு வீட்டுக்கு போகணுமான்னு யோசனையா இருக்கு. இப்டியே இங்கயே உங்களோடயே இருந்திரலாம் போல இருக்கு.
இந்தபடத்தோட பப்ளிசிட்டிக்காக தயாரிப்பாளர் நிறையை செலவழிச்சாரோ இல்லையோ, ரசிகர்கள் நீங்க நிறையவே செலவு செஞ்சி இந்த படத்தை கொண்டு போய் சேர்த்துட்டீங்க.
அரங்கத்திற்குள் நான் வரும்போது நிறைய ரசிகர்கள் எனக்கு முத்தம்லாம் கொடுத்தீங்க. உடம்பெல்லாம் வலிக்குது, ஆனா அந்த வடுக்களை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன். ஏன்னா, அது நீங்க அன்பால கொடுத்தது. உங்கள் அன்புக்கு நன்றி. வருகை தந்த அனைவருக்கும் நன்றி. கதாநாயகன் பாஸ், நடிகர்கள் பிரசாந்த், அருண் விஜய், சுமன், வின்சென்ட் அசோகன், இயக்குனர் ஆபாவணன் உட்பட பலர் வாழ்த்தி பேசினார் விழாவுக்கு வந்த அனைவரையும் தயாரிப்பாளர் சித்திரைசெல்வன் வரவேற்றனர்.
முடிவில் இயக்குனர் ரமேஷ் செல்வன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை நடிகர் அபிஷேக், நடிகை தேவி கிருபா இருவரும் தொகுத்து வழங்கினார்.
மேலும் விபரங்களுக்கு ஜி.பாலன் செய்தி தொடர்பாளர் பேச – 093833 88860
Comments
Post a Comment