முத்தக் காட்சியில் நடிக்க மகளுக்கு அனுமதி கொடுத்த அர்ஜூன்!!!

Monday,6th of May 2013
சென்னை::சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்க மகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜூன்.
 
பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் அர்ஜூனின் மூத்த மகள்
ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். பூபதி பாண்டியன் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 'நாடோடிகள்' படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். சினிமா என்றாலே முத்தக் காட்சிகள் இருக்குமே, அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பீர்களா..? என ஐஸ்வர்யாவை கேட்டால் உடனே நடிப்பேன் என்கிறார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது : “என் அப்பா என்னை மிகவும் தைரியமான பெண்ணாகத்தான் வளர்த்திருக்கிறார். சினிமாவுக்கு நடிக்க வந்த பிறகு இந்தக்காட்சிகளில் மட்டும் தான் நடிப்பேன், அந்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது, ஒரு படத்தின் திரைக்கதைப்படி காட்சிக்கு மிகவும் முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்கவும் கூட முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

Comments