கிளாமர் வேடங்கள் வேண்டவே வேண்டாம்:ரெஜினா ஆந்திராவுக்கு ஓட்டம்!!!

Tuesday,14th of May 2013
சென்னை::கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ரெஜினா. ஆனால், ஏற்கனவே, "கண்ட நாள் முதல் உட்பட ஓரிரு படங்களில் தமிழில் நடித்த ரெஜினா, பின், "சிவா மனசுல சக்தி படத்தின், தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து, ஒரே படத்தில் பிரபலமாகி விட்டார்.அத்துடன், அடுத்தடுத்து, அங்கு ஹிட் படங்களாக அமைந்ததால், தமிழகத்தையே மறந்திருந்த ரெஜினாவை, டைரக்டர் பாண்டிராஜ் தான் மீண்டும் கோலிவுட்டுக்கு கொண்டு வந்தார்.
 
ஒருவழியாக, இந்த முறை தமிழிலும் வெற்றி பெற்று விட்டார் ரெஜினா.இருப்பினும், புதிதாக படங்கள் தான் புக்காகவில்லை. "என்ன காரணம் என்று விசாரித்தால், கிளாமர் கதைகளே பிடிக்காத ரெஜினாவை, தேடி வந்ததெல்லாம், கிளாமர் கதைகள் தானாம். அதனால் தான், "நல்ல படம் கிடைக்கும் போது தமிழுக்கு வருகிறேன் என்று கூறி, மீண்டும் ஆந்திராவில் முகாம் போட்டுள்ளார் ரெஜினா.

Comments