Monday,13th of May 2013
சென்னை::1 புதிய இயக்குனர் குறித்து உங்கள் கருத்து ?
பெரிய பட்ஜெட் படத்திற்கு தான் ரசிகர்கள் வருவார்கள், சின்ன பட்ஜெட் படத்திற்கு வரமாட்டார்கள் என்ற நிலைமாறி, வித்தியாசமான படம் என்றால், அதற்கு ரசிகர்கள் அதிகமாக வருகின்றனர். சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றியை பெறுகின்றன. புதிய இயக்குனர்கள், புதுப்புது விஷயங்களோடு வருவதால், இளைஞர்களை ஈர்க்கும் வகையில், வித்தியாசமா படங்களை கொடுக்க முடிகிறது.
2 நீங்கள் நடிக்கும் "மூடர் கூடம் படத்தின் தலைப்பே, வித்தியாசமாக உள்ளதே?
"ஏடா கூட மான ஆட்களிடம், நான் சிக்கிக்கொண்டு, அவஸ்தை படுவது தான், படத்தின் கதை. இந்த படத்தின், ஒவ்வொரு கேரக்டரும் வித்தியாசமாகவும், யதார்த்தமாகவும் இருக்கும். "பசங்க பாண்டிராஜ் தான், இந்த படத்தை வெளியிடப் போகிறார். அப்படியானால், படத்தில் விசேஷம் இல்லாமல் இருக்குமா?
3 கிளாமராக நடிக்கும் எண்ணம் உண்டா?
அழகை எல்லாரும் ரசிப்பது உண்டு. அழகான கேரக்டர் அமைந்தால், ரசித்து நடிப்பேன். கிளாமரா நடித்தால் தான், வாய்ப்பு கிடைக்கும் என்பது தவறு. கிளாமராக நடித்தால் மட்டுமே, ரசிகர்களை ஈர்க்க முடியும் என்ற நினைப்பு, என்னிடம் அறவே இல்லை.
4 கதை கேட்டுத் தான், நடிக்க சம்மதிக்கிறீர்களா?
"களவாணி படம் முழுக்கதையும் கேட்டேன். பிடித்திருந்தது. ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்தது. "பசங்க படத்தை எடுத்த பாண்டிராஜ், "மெரீனா படத்தில் நடிக்க அழைச்சப்ப, நல்ல
கேரக்டர் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்னார். அவரின் திறமை முன்பே தெரிந்ததால், கதை கேட்கவில்லை. ஆனாலும், இப்போதெல்லாம், கதை கேட்டு, பிடித்திருந்தால் தான், படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன்.
5 சக நடிகைகளின் போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?
தமிழில் மட்டும், 50 படங்கள் வரை தயாரிப்பில் உள்ளது என்கின்றனர். இந்த படங்களில் குறைந்தது, 30 நடிகைகளாவது புதியவராக இருக்கலாம். யாரையும் போட்டியா நினைத்தால்,
முன்னேற முடியாது. கிடைக்கும் வாய்ப்பை, நன்றாக பயன்படுத்துவது தான், புத்திசாலித் தனம். மற்றவர்களை நமக்கு போட்டியாக நினைக்க கூடாது.
Comments
Post a Comment