அனுஷ்கா வேண்டுகோளை நிராகரித்த இயக்குனர்!!!


Friday,24th of May 2013
சென்னை::அனுஷ்கா, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை. இவருக்கு ஹிந்தியிலும் எப்படியாவது ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது ஆசை.அது மட்டுமல்ல ஒரு ஹிந்தி படத்திலாவது எப்படியாவது சொந்த குரலில் பேசி நடித்து விட வேண்டும் என்று நினைப்பவர். அந்த ஆசையை இயக்குனரிடம் சொல்ல, அவரோ அதை நிராகரித்து விட்டார்.
 
‘நான் ஈ’ படம் மூலம் தமிழ், ஹிந்தித் திரையுலகிலும் நன்றாக அறியப்பவட்டவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் தற்போது எடுத்து வரும் ‘பாகுபலி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் அனுஷ்கா. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
சிறு வயதிலிருந்தே ஹிந்தி நன்றாகப் பேசக் கூடியவரான அனுஷ்கா, இயக்குனர் ராஜமௌலியிடம் இந்த படத்திற்கு சொந்த குரலில் பேச வேண்டும் என்ற அவருடைய ஆசையை வேண்டுகோளாக வைத்தார். ஆனால், இயக்குனர் ராஜமௌலியோ அவரது ஆசையை அமைதியாக நிராகரித்து விட்டார்.
 
100 கோடி ரூபாய் செலவில், பெரிய பட்ஜெட்டில், ரிஸ்க் எடுத்து தயாராகி வரும் படத்தில் மேலும் ஒரு ரிஸ்க் எடுக்க அவர் விரும்பவில்லையாம்.
இதனால், அனுஷ்கா கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம்.

Comments