ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகவும் பிடித்திருந்தது! யுவன் ஷங்கர் ராஜா!!!

Monday,6th of May 2013
சென்னை::.ஆர்.ரஹ்மானின் இசையில் மரியான் படத்துக்காக முதன்முதலாக ஒரு பாடலை பாடியுள்ளார் யுவன்ஷங்கர்ராஜா. இந்த பாடலை பாடிய அனுபவம் பற்றி யுவனிடம் கேட்டபோது, ரொம்ப நல்ல பாடல். அவரது இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலில் இந்த பாடல் விசயமாக ஏ.ஆர்.ரஹ்மான் என்னை தொடர்பு கொண்டபோது, மரியான் படத்தில் தனுசுக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று சொன்னார். அதற்கு நான் எந்த காரணமும் கேட்கவிலலை. எப்போது வரவேண்டும் என்று மட்டும்தான் கேட்டேன்.

அதேபோல், அவர் சொன்ன நாளில் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றேன். குறிப்பாக நானும் ஒரு இசையமைப்பாளர் என்பதை மறந்து ஒரு பாடகராக மட்டுமே சென்றேன். அவர் என்ன சொன்னாரோ அதன்படியே பாடிக்கொடுத்தேன். பாடல் ரொம்ப அற்புதமாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னபோது, எனனை கட்டிப்பிடித்துக்கொண்டார் ரஹ்மான் என்று அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் யுவன்ஷங்கர்ராஜா.

Comments