கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா!!!

Sunday,12th of May 2013
சென்னை::கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா.இதுபற்றி த்ரிஷா கூறியதாவது:
‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘ரம்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறேன். ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதைகள் நிறைய வருகிறது. தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன். இயக்குனர் பாண்டியன் கூறிய கதை பிடித்திருந்ததால் ‘ப்ரியம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதில் பூனம் பஜ்வா, ஓவியாவும் நடிக்கிறார்கள்.

இந்த ஆண்டு எனது பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் 10 ஆயிரம் அடி உயரமுள்ள பனி மலையில் கொண்டாடினேன். அம்மாவும் உடனிருந்தார். இந்த பிறந்த நாளில் எனது கண் மற்றும் உடல் உறுப்பு களை தானம் செய்ய எண்ணி இருந்தேன். வெளிநாட்டில் இருந்ததால் அது முடியாமல் போனது.

தற்போது நாடு திரும்பிவிட்டேன். எளிமையான ஒரு நிகழ்ச்சியில் எனது கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளேன். என்னுடன் எனது ரசிகைகளும் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் அதுபற்றி சொல்வேன்.
ஹீரோயின் முக்கியத்துவம் கொண்ட ஸ்கிரிப்ட் இருந்தால் உடனடியாக கால்ஷீட் தருகிறேன் என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கமர்ஷியல் கதைகளில் நடித்து விட்டேன். மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதால் ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். அதில்கூட உண்மையிலேயே வித்தியாசம் இருந்தால்தான் ஏற்கிறேன்.

Comments