Friday,3rd of May 2013
சென்னை::சம்பளத்தை உயர்த்தியதால் பட வாய்ப்பை இழந்தார் காஜல் அகர்வால்.‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ‘ஜில்லா’, கார்த்தியுடன் ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் கைநிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது நிலைமை மாறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்கு காரணம்.. சம்பளத்தை அவர் 1 கோடியாக உயர்த்தியதுதான் என்று கூறப்படுகிறது.
தமிழ் படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் உள்ளது. தெலுங்கில் ராம் சரணுடன் ‘நாயக்’, ஜூனியர் என்டிஆருடன் ‘பாட்ஷா’ என 2 படங்கள் மட்டுமே கைவசம் இருந்தது. அப்படங்கள் முடிந்து திரைக்கு வந்துவிட்டது. படங்கள் கமர்ஷியலாக ஓடினாலும் காஜலுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் ஒப்பந்தம் ஆகவில்லை. பவன் கல்யாணுடன் ‘கப்பர் சிங் 2’ படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது அந்நிறுவனமும் வேறு ஹீரோயினை தேடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியிலும் புதிய படங்கள் எதுவும் கைவசம் இல்லையாம்.இதனால், காஜல் மட்டுமல்ல.. ஒரு கோடி சம்பள கனவில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லோருமே கலக்கம் அடைந்துள்ளனர்.

Comments
Post a Comment