வடிவேலுக்காக ஏ.வி.எம்-ல் தயாராகும் அரண்மனை!!!

Saturday,11th of May 2013
சென்னை::தனது நகைச்சுவையின் மூலம் கோடம்பாக்கத்தில் நகைச்சுவை ராஜாவாக வலம் வந்த வடிவேலுவை, தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் இன்றி பதுங்கியிருந்த அவர், தற்போது பாய தயாராகிவிட்டார்.

அதுவும் சாதாரணமான பாய்ச்சல் இல்லை. தமிழகமே அதிரும் அளவுக்கு அவருடைய பாய்ச்சல் இருக்க வேண்டும் என்று, தற்போது ஹீரோவாக நடிப்பது என்று முடிவெடுத்த வடிவேலு 'தெனாலிராமன்' என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'பட்டா பட்டி' என்ற படத்தை இயக்கிய யுவராஜ் இயக்குகிறார்.

இப்படத்தின் போட்டோஷூட் நேறு முன் தினம் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. அதற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுக்குகொண்டிருக்கிறது. இந்த செட்டுக்கான வேலைகள் முடிய இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. செட் அமைக்கும் பணி முடிந்தவுடன் தெனாலிராமன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தின் அரண்மனை செட்டும் கிட்டதட்ட இம்சை அரசன் படத்தில் உள்ள அரண்மனை செட் போலவே அமைக்கப்பட்டு வருகிறதாம்.

Comments