Friday,10th of May 2013
சென்னை::"எங்கேயும் எப்போதும்" படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்தவர் சர்வானந்த். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனபோதும் அதன்பின் நேரடி தமிழ் படம் எதிலும் அவர் நடிக்கவில்லை. தெலுங்கில் மட்டும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் சர்வானந்த், இப்போது ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு இவ்ளோ பெரிய இடைவெளி ஏன்?
நிறைய ஸ்கிரிப்ட் கேட்டேன். எதுவுமே எனக்கு செட் ஆகல. எங்கேயும் எப்போதும் படம் எனக்கு மிகப்பெரிய பேர் பெற்று தந்தது. அதனால் எனக்கு அடுத்த படம் மேல ஒரு பயம் இருந்தது. அதனால் ரொம்ப வெயிட் பண்ணி நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்ப எனக்கு கிடைத்த படம் தான் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
* இந்த படத்தில் உங்க ரோல்?
இளைஞர்கள் எப்படி ரொம்ப அசால்ட்டா இருக்காங்க, அவங்க சந்திக்கும் பிரச்னைகள் பற்றி சொல்ற படம் இது. முழுக்க முழுக்க சிட்டியில் நடக்கும் கதை இப்படம்.
* தெலுங்கு, தமிழ் எதில் கஷ்டம் அதிகம்?
கஷ்டம்னு எதுவும் இல்லை. தமிழ் இப்பதான் கத்துகிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு - மூன்று படம் நடித்தால் நல்ல பேச வரும்னு நினைக்கிறேன். மொழி தெரிந்து, புரிந்து நடித்தாலே போதும்.
* எந்த மொழில ரீச் ஆகுறது ரொம் கஷ்டம்?
தமிழ் மொழியில ரீச் ஆகுறது தான் ரொம்ப கஷ்டம். தெலுங்கில் இதுவரை 15-16 படங்கள் வரை பண்ணிட்டேன். ஆனால் தமிழில் முதல் வாய்ப்பு அவ்ளோ ஈஸியா கிடைக்கல, கிடைத்த முதல் படம் எங்கேயும் எப்போதும், இந்த 15-16 படங்களில் கிடைத்த பேரை விட அதிகமா இந்தப்படம் கொடுத்திருக்கு. இந்த ஒரு படத்தால் எனக்கு புது வாழ்க்கை கிடைத்திருக்கு. பாஸிடிவ் விமர்சனங்கள் கொடுத்திருக்காங்க. இதைப்போல் இன்னும் நிறைய நல்ல நல்ல படங்கள் தமிழ்ல நடிக்க ஆசைப்படுறேன்.
* தமிழ்ல யாரை பாலோ பண்ண ஆசைப்படுறிங்க?
ரஜினி, கமல், சூர்யா, அஜித், விஜய், விக்ரம் இப்படி நிறைய பேர் இருக்காங்க. அவங்க இடத்தை தொட முடியலைனாலும் அவங்கள மாதிரி கொஞ்சமாவது நடிச்சு நல்ல இடத்துக்கு வர ஆசைப்படுகிறேன்.
* நீங்க வாய்ப்பு தேடி போறிங்களா? வாய்ப்பு உங்கள தேடி வருதா?
இரண்டுமே இருக்கு. சில நேரம், நானே இயக்குனர்களிடம் நேரடியாக சென்று வாய்ப்பு கேட்டு இருக்கேன். என்னை தேடியும் சில ஸ்கிரிப்ட் வருது.
* தமிழ்ல யார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுறிங்க?
இன்றைக்கு நடிகர்களை வேறு ஒரு களத்திற்கு எடுத்து போறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் ஷங்கர், மணிரத்னம் இவங்க இரண்டு பேரும் ரொம்ப முக்கியமானவர்கள். அதனால் இவங்க படங்களில் நடிக்க ஆசை இருக்கு. இவங்க படங்களில் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கு.
* இப்போது இருக்கும் உங்க வயது நடிகர்களில் யார் நடிப்பு ரொம்ப பிடிக்கும்?
சிம்பு, விஷால், ஜீவா இப்படி நிறைய நடிகர்கள் இருக்காங்க. இவங்க நடிப்பை பார்த்து நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டது உண்மை.
* நீங்க சொல்ல விரும்புவது?
ஜே.கே எனும் நண்பனின் கதையில் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு, முடிந்தளவு நானும் கஷ்டப்பட்டு வேலை பார்த்துள்ளேன். இந்த ரோல் தான் செட் ஆகும், அந்த ரோல் தான் பண்ணுவேன் என்று இல்லை. நல்ல கதை இருந்தால் கிராமத்து ரோலிலும் நடிக்க ஆசை இருக்கு. முதல் படத்தில் எனக்கு கொடுத்த சப்போர்ட் மாதிரி, இனி வரும் காலங்களில் என் எல்லா படங்களுக்கும் உங்க சப்போர்ட் வேண்டும் என ரசிகர்களாகிய உங்களை கேட்டு கொள்கிறேன்.

Comments
Post a Comment