பிறந்த நாளில் அஜீத் புது அறிவிப்பு!!!

Wednesday,1st of May 2013
சென்னை::பில்லா-2 வைத் தொடர்ந்து, விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜீத். மொத்த படத்தையும் முடித்து விட்டு, "சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இறங்கி விட்ட போதும், இன்னும் படத்திற்கான டைட்டில் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, அப்படத்துக்கு, "வலை என்று பெயர் வைத்திருப்பதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, அஜீத்தின் மாறுபட்ட புகைப்படங்களை வைத்து, அவரது ரசிகர்கள் டிசைன் செய்து, இணைய தளங்களில் உலவவிட்டு வருகின்றனர். அதைப்பார்த்த விஷ்ணுவர்த்தன், அஜீத்  படத்துக்கு,"வலை என்று தலைப்பு வைக்கவில்லை என்று மறுத்துள்ளார். "சரி, என்ன தான் தலைப்பு வைத்துள்ளீர்கள்? என்று கேட்டால், "இரண்டு பெயர்களை யோசித்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்து, அஜீத்தின் பிறந்த நாளான இன்று, அவர் மூலமாகவே வெளியிடப்படும் என்கிறார்.

Comments