30 லட்சம் நஷ்டஈடு கேட்டு லட்சுமி ராய் வழக்கு!!!

Friday,31st of May 2013
சென்னை::கி‌ரிக்கெட் சூதாட்டம் யாருடைய நிம்மதியை கெடுத்ததோ இல்லையோ, லட்சுமி ராயின் வாழ்க்கையில் மகாசேனை கிளப்பியிருக்கிறது.
லட்சுமி ராய் எப்போதோ கி‌ரிக்கெட் நட்சத்திரங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பத்தி‌ரிகைகள் இஷ்டத்துக்கு கதை திரைக்கதை எழுதியதில் ராய் ரொம்பவே கோபமாக இருக்கிறார். அதிலும் தமிழகத்தின் முன்னணி வார இதழில் வெளிவந்த செய்தி அவரை ரொம்பவே நோகடித்திருக்கிறது.
 
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என அப்பத்தி‌ரிகை மீது 30 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதாக கேள்வி. அதேபோல் ஆங்கில நாளிதழ் ஒன்றின் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.
ராயிடம் இப்படியொரு கோப குனம் இருக்கும் என்று யாருக்கும் தெ‌ரியாமல் போய்விட்டதே.

Comments