Friday,31st of May 2013
சென்னை::விஸ்வரூபம் வெற்றியை தொடர்ந்து, கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம்-2 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. பல்வேறு தடைகளை கடந்து கமலின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் விஸ்வரூபம். இப்படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் தொடரும் என சொல்லியிருந்தார் கமல். அதன்படி விஸ்வரூபம்-2 பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. கமலே இயக்கி, நடித்து வரும் இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட நடிகர்-நடிகையரே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங்கை தற்போது தாய்லாந்தில் முகாமிட்டு படமாக்கி வருகிறார் கமல். தாய்லாந்தை தொடர்ந்து பாங்காக்கிலும், இறுதிகட்ட படப்பிடிப்புகள் டில்லியிலும் நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெறுகிறது. இறுதியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Comments
Post a Comment