Tuesday,28th of May 2013
சென்னை::ஸ்லம் டாக் மில்லினர்‘ படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஏ.ஆர். ரகுமான் தற்போது தமிழில் ‘கோச்சடையான்‘, ‘மரியான்‘ உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். ஹாலிவுட் படத்துக்கு இசை அமைக்க சென்றபோது ஸ்கிரிப்ட் விஷயத்திலும் ஆர்வம் காட்டினார். இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் முறைப்படி திரைப்பட ஸ்கிரிப்ட் படிப்பில் சேர்ந்து தேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுத தொடங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகள், படங்களுக்கு இசை அமைக்கும் பணியில் பிஸியாக இருந்ததால் ஸ்கிரிப்ட் பணி முற்றுபெறாமல் இருந்தது.
ஆனாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்கிரிப்ட்டை முடிக்கும் பணியில் இருந்தார். தற்போது 2 ஸ்கிரிப்ட்டை முழுமையாக முடித்திருப்பதுடன் அக்கதைகளை மும்பை தயாரிப்பாளர் ஒருவரிடம் தெரிவித்தார். கதை கேட்க நன்றாக இருந்ததாக கூறி அப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார் தயாரிப்பாளர். இதுபற்றி ஏ,ஆர்.ரகுமான் கூறும்போது, ‘பட தயாரிப்பு பற்றியான பேச்சுவார்த்தை முற்றுபெறாத நிலையில் இருப்பதால் மற்ற விவரங்களை பிறகு சொல்கிறேன்‘ என்றார்.

Comments
Post a Comment