Wednesday,22nd of May 2013
சென்னை::கமல்ஹசான் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் இந்தப் படம் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்தப்படி விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முதல் பாகத்தில் எந்த கதாபாத்திரங்களில் நடித்தார்களோ, அதே கதாபாத்திரங்களில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஸ்வரூபம் படத்தில் இல்லாத காதல் மற்றும் சென்டிமென்ட் விஸ்வரூபம் 2 வில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விஸ்வரூபம் 2 திரைக்கதை இந்தியாவில் நடைபெறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை இந்த வாரம் தாய்லாந்து நாட்டில் கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஐரோப்பிய நாடுகளிலும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்

Comments
Post a Comment