ஹன்சிகா வளர்க்கும் 22 குழந்தைகள்!!!

Monday,20th of May 2013
சென்னை::ஒரு சில திரைப்பட நடிகைகள் அவர்கள் செய்யும் சில நல்ல உதவிகளால் நம்மை கவர்ந்து விடுகிறார்கள்.
 
அந்த வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் ஹன்சிகா. தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் 22 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
 
அதைப் பற்றி ஹன்சிகா கூறும் போது, “என் அம்மா ஒரு டாக்டர். ஏழைகளுக்கு இலவச ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க. சின்ன வயசுல இருந்தே அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு அம்மா சொன்னது என் மனசுல பதிஞ்சிடுச்சி.அதான், நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், அம்மா மாதிரியே நானும் உதவி பண்ணணும்னு நினைச்சி என்னால முடிஞ்ச அளவுக்கு உதவி பண்ணிட்டு வர்றேன்.
 
22 குழந்தைகளைத் தத்தெடுத்து படிக்க வைக்கிறேன். அவங்களுக்கான ஸ்கூல் பீஸ், யூனிஃபார்ம், விளையாட்டுப் பொருட்கள்,  திறமைய வளர்க்கிற சிறப்புப் பயிற்சி இப்படி எல்லாத்துக்கும் ஆகற செலவுகளை நான் பார்த்துக்கிறேன். ஒரு சில நாள் ஃபிரீயா இருந்தால் உடனே மும்பைக்கு பறந்து போய் அவங்களோட இருப்பேன்.
 
இப்போ பிரஸ்ட் கேன்சரால பாதிக்கப்பட்ட 30 பெண்களோட மருத்துவச் செலவை ஏத்துக்கிட்டிருக்கேன். முதியோர்களுக்கான ஒரு ஹோம் கட்டணும்னு ஆசை இருக்கு. இதையெல்லாம் என் மனத்திருப்திக்காக மட்டும் செய்யறேன், ” என்றார்.
 
ஹன்சிகா , அழகால் மட்டும் நம் மனதில் இடம் பிடிக்கவில்லை. இம்மாதிரியான உதவிகளாலும் நிரந்தரமாக நம் மனதில் இடம் பிடிப்பார். வாழ்த்துகள் ஹன்சிகா….

Comments