2012-ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருது வழங்கும் விழா: தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்!!!
Saturday,4th of May 2013
சென்னை::2012-ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு, இந்திய சினிமாவின் நூற்றாண்டை குறிக்கும் அஞ்சல் தலையை வெளியிட்டார். பின்னர் தேசிய சினிமா விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த எழுத்தாளர், குறும்படங்கள், ஆவணப்ப்படங்களுக்கான விருதுகள் என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்ப் படமான ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்திற்கு சிறந்த மாநில மொழி படத்திற்கான விருது வழங்கப்பட்டது. ‘வழக்கு எண் 18/9’ படத்தில் பணியாற்றிய ராஜாவுக்கு சிறந்த ஒப்பனைக்கலைஞர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடன வடிவமைப்புக்கான விருது விஸ்வரூபம் படத்திற்கு வழங்கப்பட்டது. அதனை உலகப்புகழ் பெற்ற நடன வடிவமைப்பாளர் பிர்ஜு மகராஜ் பெற்றுக்கொண்டார். பரதேசி படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்தது. அதனை ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி பாடகர் விருது சங்கர் மகாதேவனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த எழுத்தாளருக்கான விருது பி.டி.கர்கா எழுதிய நூலுக்கு வழங்கப்படடது. சிறந்த திரை விமர்சன எழுத்துக்கான விருது பி.எஸ். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 14 மொழிகளில் 38 திரைப்படங்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

Comments
Post a Comment