தனது பாலிசியை தளர்த்தியுள்ள த்ரிஷா:2 ஹீரோயினுடன் நடிக்கிறார்!!!

Wednesday,8th of May 2013
சென்னை::2 ஹீரோயின்களுடன் சேர்ந்து நடிக்க உள்ளார் த்ரிஷா.தீராத விளையாட்டு பிள்ளை, திமிரு உள்ளிட்ட சில படங்களில் நடிக்க மறுத்தவர் த்ரிஷா. காரணம், அந்த படங்கள் 2 முதல் 3 ஹீரோயின்கள் கதை கொண்ட படங்கள். ஆனால் இப்போது தனது பாலிசியை தளர்த்தியுள்ளார் த்ரிஷா.
 
என்றென்றும் புன்னகை படத்தில் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து நடிக்கிறார். அதேபோல் அடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் பூனம் பஜ்வா, ஓவியா ஆகியோருடன் சேர்ந்து நடிக்கிறார் த்ரிஷா. இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கிவிட்டது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. அருண் விஜய் நடிப்பில் வெளியான ப்ரியம் படத்தை இயக்கிய பாண்டியன் இயக்குகிறார். நட்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் ஹீரோ கிடையாது.

இது குறித்து இயக்குனர் பாண்டியன் கூறுகையில், இந்து என்ற கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார். முழுக்க அவரது கேரக்டரை சுற்றித்தான் கதை நடக்கும். 3 தோழிகளின் நட்பை சொல்லும் படம். இந்த படத்தை பார்த்தபின் ஒவ்வொருவரும் இந்து போல் ஒரு தோழி வேண்டும் என ஏங்குவார்கள். இந்த கதைக்கு ஹீரோ தேவைப்படவில்லை. சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்றார்.

Comments