Monday,13th of May 2013
சென்னை::விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை::விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பில்லா படத்துக்குப் பிறகு அஜீத் - விஷ்ணுவர்த்தன் கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறது. இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைந்து நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்போது வரை படத்திற்கு எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை.
ஆனால் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு குளு மணாலியில் நடந்து வருகிறது. இதனையடுத்து டப்பிங், போஸ்ட் புரடெக்சன் போன்ற வேலைகள் நடைபெற இருக்கின்றன.
இந்த வேலைகள் முடிவடைய எப்படியும் மூன்று மாதங்கள் ஆகலாம் என்பதால் படம் ஆகஸ்ட 15ம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படத்துக்கு அஜீத் 53 என்று ரசிகர்கள் பெயரிட்டுள்ளனர். படத்தின் டிரைலர் இப்போது யுடியூப்பில் ஹிட் அடித்துள்ளது.
Comments
Post a Comment