திருச்சி மாவட்ட விஜய் இளைஞரணி தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: விஜய் திருமணத்தை நடத்தி வைத்தார்!!!

Monday,13th of May 2013
சென்னை::திருச்சியில் 15 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பார்க்கலாம் என சூசகமாக பதில் அளித்தார்.மாவட்ட விஜய் இளைஞரணி தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு திருச்சியில் இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நற்பணி இயக்கத் தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமை வகித்தார்.நடிகர் விஜய்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 15 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, 51 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். பின்னர் ரசிகர்கள் எழுதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில், Ôரசிகர்கள்தான் எனக்கு தலைவர். தனது மகன் எதிர்காலத்தில் என்னவாக வருவார் என்று இப்போது சொல்ல முடியாது. போகப் போகத்தான் தெரியும். ÔதலைவாÕ அரசியல் படம் இல்லை. முழு ஆக்ஷன் படம். திரைக்கதை சிறப்பாக இருக்கும். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. ரசிகர்களை கவரும் என்றார். அனைத்து ரசிகர்களின் மனதில் உள்ள கேள்வி இது. தற்போது மக்களுக்கு தொண்டு செய்து வருகிறீர்கள். அரசியலுக்கு வரும் நோக்கம் உண்டா? எப்போது புதிய கட்சியைத் துவக்கி அரசியலுக்கு வருவீர்கள்? என்ற கேள்விக்கு, “இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதை வைத்து நீங்கள் இப்படி கேட்கிறீர்கள். இதற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மன திருப்திக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். இதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை.

இருந்தாலும் உங்கள் கேள்விக்கான பதில் (ஒரு நிமிட இடைவெளிவிட்டு...) பார்க்கலாம்Ó என்றதும் ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். நிகழ்ச்சியின்போது ரசிகர்கள் கூட்டம் மேடையை நோக்கி முண்டியடித்து வந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. மேலும் பந்தல் மற்றும் தடுப்புக்கட்டைகள் மீது ஏறி நின்று ஆரவாரம் செய்தபடி இருந்ததால் அவை உடைந்து விழும் நிலை ஏற்பட்டது. போலீசாரும், விஜய் உடன் வந்திருந்த மெய்க்காவலர்களும் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனவே விஜய் அதிகம் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments