ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் 10 படங்கள் தயாரிக்கிறார்!!!

Thursday,2nd of May 2013
சென்னை::ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் 10 படங்கள் தயாரிக்கிறார். இவற்றில் பூலோகம், மரியான், ஐ, விஸ்வரூபம்-2, திருமணம் என்கிற நிக்கா, வல்லினம் ஆகிய 6 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. மேலும் கமல் நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்', அர்ஜுன் மற்றும் விஜய் நடிக்கும் படங்கள் இன்னொரு புதுப்படம் ஆகியவற்றையும் தயாரிக்கிறார்.

பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, திரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. மரியான் படத்தில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கின்றனர். 'ஐ' படத்தில் விக்ரம், எமிஜாக்ஷன், சுரேஷ்கோபி நடிக்கின்றன. ஷங்கர் இயக்குகிறார்.

இதுகுறித்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் பத்து படங்களில் ஆறு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 'மரியான்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தின் கதை, தமிழகத்திலும், நமீபியாவிலும் நடப்பது போல் இருக்கும். இதில் ஏ.ஆர். ரகுமான் இசையில் தனுஷ் எழுதிய கொம்பன் சுறா வேட்டையாடும் என்ற பாடலை யுவன்சங்கர் ராஜா பாடி உள்ளார். மீனவ கிராமத்தில் உள்ள சராசரி இளைஞனின் வாழ்க்கையையும் அவன் காதலையும் சொல்லும் கதையும் படத்தில் தயாராகிறது.

'ஐ' படத்தில் விக்ரம் இதுவரை எவரும் நடித்திராத வேடத்தில் நடித்து வருகிறார். உடம்பை கூட்டியும், குறைத்தும் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். இப்படம் உலகம் முழுவதும் பேசப்படும் படமாக இருக்கும். பூலோகம் படம் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சாதாரண இளைஞனை எந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு போகின்றன என்ற கதையம்சத்தில் தயாராகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments