Wednesday,17th of April 2013
சென்னை::பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திரையிசையில் தங்களுக்கென்று தனிப்பாணியை உருவாக்கிய விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டனர்.
இருவரும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப்பெற்றவர் ராமமூர்த்தி.

Comments
Post a Comment