ஒரு வருடம் தமிழில் நடிக்காதது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் பூர்ணா!!!

Thursday,4th of April 2013
சென்னை::ஒரு வருடம் தமிழில் நடிக்காதது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் பூர்ணா.
ஈரம்Õ, ‘வித்தகன்Õ, ‘துரோகிÕ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. கடந்த 1 வருடமாக தமிழில் இவர் நடித்த படம் ரிலீசாகவில்லை. இது பற்றி அவர் கூறியதாவது:தமிழில் எனது படம¢ வெளியாகி நீண்ட நாள் ஆகிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பெயர் வாங்கித்தரும் அளவுக்கு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை. இந்த ஆண்டு எனக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது ‘தகராறுÕ என்ற படத்தில் துணிச்சலான மதுரைக்கார பெண்ணாக நடிக்கிறேன்.
பொதுவாகவே மதுரைக்கார பெண்கள் துணிச்சலானவர்கள் என்று இயக்குனர் என்னிடம் கூறி இருந்தார். மதுரையில் ஷூட்டிங் நடந்தபோது அதை நேரிலேயே கண்டேன். சில நாட்கள் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தேன். அதுவே எனது கதாபாத்திரத்துக்கு உதவியாக இருந்தது. இதற்காக எனது தோற்றத்தையும் சற்று மாற்றிக்கொண்டிருக்கிறேன். இதில் அருள்நிதி ஹீரோ. அவருடன் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. வழக்கமான ஹீரோவாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.
இவ்வாறு பூர்ணா கூறினார்.

Comments