Saturday,20th of April 2013
சென்னை::இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யாமி கவுதம். தற்போது தென்னிந்திய சினிமாவில் முகாமிட்டுள்ளார். தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வரும் யாமி கவுதம் அளித்த பேட்டி இதோ...

* தமிழ், தெலுங்கில் கிடைத்துள்ள வரவேற்பு பற்றி?

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. "தமிழ்ச் செல்வனும், தனியார் அஞ்சலும் என்ற,படத்திலும், "கவுரவம் என்ற படத்திலும், நடிக்கிறேன். இரண்டு படங்களுமே,தமிழிலும், தெலுங்கிலும், தயாராகின்றன.

* இரண்டு மொழிகளில் நடிப்பது சிரமமா?


சிரமம் தான். ஆனால், நடிப்பு என்று வந்து விட்டால், இதுபோன்ற சவால்களை எல்லாம், சந்தித்து தான், ஆக வேண்டும். படைப்பு திறன் உள்ளவர்களுக்கு, மொழி ஒருதடையில்லை என்பது, என்னுடைய கருத்து.

* எந்த கேரக்டரில் நடிக்க விருப்பம்?


சமுதாயத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, தயாராகும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். இந்தியில், இதற்கு முன் நடித்த, "விக்கி டோனர் படம், குழந்தையின்மை மற்றும் விந்தணு தானம் ஆகியவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தயாரானது.தற்போது, தமிழில் நடித்துள்ள, "கவுரவம் படம்,கவுரவ கொலை குறித்த சம்பவங்களை பற்றியது.

* வக்கீலாக நடித்த அனுபவம் குறித்து?


விரைவில் வெளியாகவுள்ள, ஒரு படத்தில்வக்கீலாக நடித்துள்ளேன் இந்த கேரக்டரை, அனுபவித்து நடித்தேன். ஏனென்றால்,உண்மையிலேயே, நான், சட்டம் படித்தவள். என் வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான கேரக்டர் என்பதால், அதில் நடிப்பதில்ஒரு ஆத்ம திருப்தி கிடைத்தது.

* அடுத்த படம்?


இந்தியில், "அமன் கிஆஷாஎன்ற படத்தில் நடிக்கிறேன்.நீரஜ் பாண்டே தான், இந்தபடத்தின் இயக்குனர்.இந்தியாவின் மிகச் சிறந்தஇயக்குனர்களில், அவரும்ஒருவர்என்பதால், அவரது படத்தில் நடிப்பது, நல்லஅனுபவமாக இருந்தது.

Comments