Sunday,28th of April 2013
சென்னை::கன்னட நடிகர்களுக்கு எப்போதுமே தமிழில் நல்ல எதிர்காலம் இருந்து வருகிறது. குறிப்பாக, கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த ரஜினிகாந்த், அர்ஜூன், முரளி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களைத் தொடர்ந்து இப்போது ரமேஷ் அரவிந்தும் தமிழுக்கு வருகிறார். ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்தவர்தான் இவர். சதிலீலாவதி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட சில படங்களில் கமலுடன் இணைந்து நடித்தார். ஆனால் அதன்பிறகு முழுநேர கன்னட நடிகராகி விட்டார்.
மீண்டும் தமிழுக்கு வர சரியான தருணத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அவர், இப்போது இயக்குனராக தமிழுக்கு வருகிறார். அந்த படத்தில் கமல் நாயகனாக நடிப்பதாகவும், லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் அப்படத்தை தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கன்னடத்தில் சில படங்கள் இயக்கியுள்ள ரமேஷ்அரவிந்த், இந்த படத்தின் மூலம் தமிழில் வெற்றிப்பட இயக்குனராகி விட வேண்டும் என்று தீவிர கதை விவாதத்திலும் இறங்கியிருக்கிறாராம்.

Comments
Post a Comment