தலைவா படி‌ப்‌பிடி‌ப்பு முடி‌ந்தது - விஜய் வீடு திரும்புகிறார்!!!


Thursday,25th of April 2013
சென்னை::நடிகர் விஜய் நாளை ஆஸ்திரேலியா படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புகிறார்.
 
ஏ.எல்.விஜய்யை தயா‌ரிப்பாளர்களும், நடிகர்களும் விரும்ப என்ன காரணம்? பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முதன்மையான காரணம் ஒரு படத்தை அவர் முடிக்கிற வேகம். எடுப்பதும் தெ‌ரியாது தொடுப்பதும் தெ‌ரியாது.
 
 அப்படியொரு வேகத்தில் விஜய் நடித்திருக்கும் தலைவா படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய். ஆஸ்திரேலியாவில் அவர்கள் நடத்தியது கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு. நினைத்ததைவிட வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து நாளை சென்னை திரும்புகிறார்கள். ஒன்றிரண்டு நாட்கள் பேட்ச் வொர்க் வேலைகள் இருக்கலாம். மற்றபடி டாக்கி போர்ஷன் முழுக்க முடிந்துவிட்டது.
 
இதன் காரணமாக விரைவில் ‌ஜில்லா படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வார் என‌த் தெ‌ரிகிறது. நேசன் இயக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் விஜய்யின் ஜோடி. மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். 

Comments