கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Sunday,14th of April 2013
சென்னை::*    ஸ்கூபா டைவிங் எனப்படும் கடலுக்குள் நீந்தும் சாகச விளையாட்டுக்கு சமீபத்தில் டாப்ஸி லைசன்ஸ் பெற்றார். கடந்த வாரம் மாலத்தீவு சென்று கடலில் டைவிங் சாகசம் செய்து மகிழ்ந்தார். இதற்கு முன்பு த்ரிஷா இந்த லைசன்ஸ் பெற்றிருக்கிறார்.

*    ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் மாதக்கணக்கில் ஷூட்டிங்கில் பங்கேற்கும் திட்டத்துடன் ஐதராபாத் சென்ற அஜீத் அங்கு நடந்துவரும் ஸ்டிரைக்கை அடுத்து பட குழுவுடன் சென்னை திரும்பிவிட்டார்.

*    விக்ரம் & எமி ஜாக்சன் நடிக்கும் ‘ஐ’ படத்தை வரும் ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் ஷங்கர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவது பற்றி பேச்சு நடக்கிறதாம்.

*   சாப்பிடுவதற்கு ஆண்டவன் வசதி கொடுத்திருக்கும்போது அதை அனுபவிக்காமல் உடலை மெலியச் செய்வதற்காக சாப்பிடாமல் இருப்பது வாழ்வில் ஏதோ ஒன்றை இழப்பதற்கு சமம். என்னால் ருசியாக சாப்பிடாமல் இருக்க முடியாது. உடல் மெலிய பட்டினி கிடக்க மாட்டேன் என்பது காமெடி நடிகை ஆர்த்தியின் பாலிசியாம்.

*    ‘ரவுடி ரத்தோர்’ இந்தி படத்தில் நடித்த காஜல் வசிஷ்ட் விரைவில் டோலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளார். மராட்டிய மொழி படங்களிலும் நடித்துள்ள இவருக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி ஆகிய மொழிகள் தெரியுமாம்.
*    ‘ஸ்ரீராம ராஜ்யம்‘ படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருது வழங்கப்பட்டது. தங்க சிலை மற்றும் சான்றிதழை அமிதாப்பச்சனிடமிருந்து  நயன்தாரா பெற்றார்.

*    ‘இவன் வேற மாதிரி‘ படத்தில் நடித்து வரும் ‘கும்கி‘ விக்ரம் பிரபு ஷூட்டிங்கில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. கடந்த 2 வாரமாக ஓய்வில் இருக்கும் அவர் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

*    ஸ்லம்டாக் மில்லினர்‘ படத்தையடுத்து ‘தி செவன்த் சன்‘ என்ற ஹாலிவுட் படத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமானிடம் ‘இப்படத்துக்கும் ஆஸ்கர் விருது கிடைக்குமா?‘ என்றபோது, ‘ஒவ்வொரு படத்துக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற எண்ணத்துடன் யாரும் இசை அமைக்க முடியாது. காட்சிகளுக்கு ஏற்ற இசைதான் முக்கியம்‘ என¢றார்.

*    ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்பது விஷாலின் ஆசை கிடையாதாம். ஒரு ஆள் 10 பேரை அடித்தால் நம்பும்படியாக இருக்க வேண்டும். அந்த தோற்றம் அவரிடம் இருந்ததால் ஆக்ஷன் வேடங்கள் அவரைத் தேடி வந்ததாம்.

*    தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படமொன்றில் சசிகுமார், ‘நான் ஈ‘ சுதீப் இணைந்து நடிக்க உள்ளனர்.
*    பாலியல் தொழிலாளி வேடத்தில் ஸ்ரேயா நடிக்கும் ‘பவித்ரா‘ தெலுங்கு படத்தின் ஆடியோ ஆந்திராவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

*    ‘ரவுடி ரத்தோர்‘ இந்தி படத்தில் நடித்த காஜல் வசிஷ்ட் விரைவில் அல்லு அர்ஜுன் நடிக்கும் டோலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளாராம். இவர் ஏற்கனவே மராட்டிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

*   ‘லவ்வர் பாய் இமேஜ் எனக்கு இருப்பதால் அதுபற்றி கவலை இல்லை. இப்படித்தான் எனது இமேஜ் இருக்க வேண்டும் என்று மண்டையைபோட்டு உடைத்துக்கொள்வதும் இல்லை. இப்படி சொல்பவர், ஆர்யா.

*    சில சமயம் எனது இறுதி ஊர்வலம் நடப்பதுபோல் கனவு வரும். அப்போது ஊர்வலத்தின் முன் நடனம் ஆடும் நண்பர்கள் சரியாக ஸ்டெப்போடாமல் ஆடுவது தெரியும். அடுத்த முறை இதுபோல் கனவு வரும்போது நடனத்தை சரியாக ஆடுவதற்கு பிரபுதேவாவிடம் என் நண்பர்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றும் என தான் கண்ட கனவு பற்றி கமென்ட் அடிக்கிறார் விவேக்.

Comments