Tuesday,2nd of April 2013
சென்னை::ஒரு மலையாள படத்தில் நடித்த போது, எனக்கும், ஆண்ட்ரியாவுக்குமிடையே காதல் உருவானது என்று சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் டைரக்டர் பாசிலின் மகனான பஹத். அதோடு, அவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறியிருந்தார்.ஆனால், அதைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவின் அபிமானிகள் அவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்த ஆண்ட்ரியா, இப்போது பதில் கொடுத்துள்ளார். அதில், "நடிகர் பஹத், தன் விருப்பத்தை வெளிப்படையாக சொல்லியிருந்தார். காதல், கல்யாணம் என்பது இருவரது விருப்பத்துடன் நடக்க வேண்டும். ஆனால், இதில் எனக்கு சம்மதம் இல்லை என்று கூறியிருக்கும் ஆண்ட்ரியா, "இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை என்றும் சொல்லி, பஹத்தின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
Comments
Post a Comment