Thursday,25th of April 2013
சென்னை::படத்தில் யானைப் பாகனாக நடித்தீர்கள், அடுத்த படத்தில் என்ன கேரக்டர்?
படத்தின் பெயரே, " இவன் வேற மாதிரியினா பார்த்துக்கோங்க. வித்தியாசமான கேரக்டர். படத்தில், காமெடி, சென்டிமென்ட், பாட்டு, பைட்டுனு ஜனரஞ்சகமான திரைக்கதை. இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கும். தியேட்டரில் இருக்கும் நேரம், ஜாலியாக கழிய வேண்டும் என்பதே, இன்றைய இளைஞர்களின் விருப்பம். அதற்கு, இந்த படத்தில் உத்தரவாதம் உண்டு.
கதைகளை தேர்வு செய்வதில், தந்தையின் தலையீடு உண்டா?
இல்லை. நான், நடிக்கப் போகும் படங்களுக்கான கதையை, நான் தான், "ஓ.கே., செய்கிறேன். வியாபார ரீதியாகவும், வித்தியாசமாகவும் உள்ள கதையை தேர்வு செய்து நடித்தால் தான், சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். என்னுடைய படத்தின், "ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு, வரக் கூடாது என, அப்பாவிடம் அன்பு கட்டளை போட்டுருக்கேன்னா பார்த்துக்கோங்க.
லட்சுமி மேனனுடன் மீண்டும் நடிக்கும் எண்ணம் உண்டா?
இயக்குனர்கள், கதையை ரெடி செய்யும்போதே, அந்த கதைக்கு ஏற்ற, ஹீரோயினை தேர்வு செய்து விடுவார்கள். இதில், எனக்கு எந்த வேலையும் இல்லை. நான், இயக்குனரின் நடிகராக இருக்கவே விரும்புகிறேன். அப்போது தான், படம் நினைத்த மாதிரி வரும். நடிகைகளுக்கு சிபாரிசு செய்வது, என் வேலை அல்ல.
இளம் இயக்குனர்கள், உங்களுக்கு கதை சொல்ல தயங்குவதாக கூறப்படுகிறதே?
தயங்க தேவையில்லை. யார் மூலமாக என்னை தொடர்பு கொள்ளலாம் என, திரையுலகில் உள்ளவர்களுக்கு தெரியும். சரியான முறையில் அவர்களை அணுகினால், என்னுடன் பேச, அவர்களுக்கு எந்த தடையுமிருக்காது.
உங்கள் நடிப்புக்கு, வீட்டில் கிடைத்த வரவேற்பு குறித்து?
தாத்தாவும், அப்பாவும் சினிமாவில் நிறைய"ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். பல வெற்றிகளை தொடர்ந்து பார்த்த என் குடும்பத்தினருக்கு, என் வெற்றி, மிகச்சாதாரணம் தான். எனக்கு வேண்டுமென்றால், இது பிரமாண்ட வெற்றியாக தெரியலாம்.
Comments
Post a Comment