சென்னை::ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்‘, தனுஷ் நடிக்கும் ‘மரியான்‘, சித்தார்த் நடிக்கும் படம் மற்றும் கவுதம் மேனன், ராஜீவ் மேனன் இயக்கும் படம் என 5 படங்களுக்கு இசை அமைக்கிறார்
ஏ.ஆர்.ரகுமான்.
* செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இதன் ஷூட்டிங் பிரமாண்ட அரங்கில் நடக்கிறது.
* பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9‘ படம் கன்னடத்தில் ‘கேஸ் நம்பர் 18/9‘ என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. மகேஷ்ராவ் இயக்கும் இப்படத்தில் சிந்து லோக்னாத், நிரஞ்சன் ஷெட்டி, சுவேதா பண்டித் நடித்துள்ளனர்.

* ஆந்திர மாநிலம் தில்குஷ் நகர் குண்டு வெடிப்பில் கால் இழந்த எம்பிஏ மாணவி ஒருவருக்கு சமந்தா ரசிகர் மன்றத்தினர் ரூ.50 ஆயிரம் நிதி திரட்டி அளித்தனர். இதற்கான காசோலையை மாணவியிடம் சமந்தாவே நேரில் வழங்கியதுடன், தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தாராம்.
* அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘பட்டத்து யானை’ ஷூட்டிங் திருச்சியில் நடந்தது. வில்லன் கூட்டம் துரத்தும் காட்சிக்காக வெயில் நேரத்தில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா, வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
* வசனமே பேசாமல் கமல் நடித்த படம் ‘பேசும் படம்’. இதே பாணியில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் வசனம் இல்லாத படத்தில் நடிப்பதுடன் அதை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்க உள்ளார். இந்த படத்தை ‘பிள்ள ஜமீன்தார்’ படத்தை இயக்கிய அசோக் இயக்க உள்ளார்.
* தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், ‘அட்டகத்தி’ நந்திதா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது.
* ‘ஜெயம்’ பட வில்லன் கோபிசந்த், தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கும் ரேஷ்மா என்பவருக்கும் மே 12&ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடக்கிறது.

* ‘நான் ஈ’ பட இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபாலி’ என்ற புதிய படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இதற்காக குதிரை ஏற்றம், கத்திச் சண்டை பயிற்சி பெறுகிறார்.
* கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘துருவ நட்சத்திரம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தையடுத்து மம்மூட்டி, பஹத் பாசில் நடிக்கும்
2 மலையாள படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார் கவுதம்.
* அஜீத் & ஷாலினி தம்பதியினர் தங்களது 13&வது ஆண்டு திருமண நாளை கடந்த 24&ம் தேதி கொண்டாடினர்.
* ‘கும்கி’ விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படம் ‘சிகரம் தொடு’. ‘தூங்கா நகரம்’ இயக்குனர் கவுரவ் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் மே முதல் வாரம் தொடங்குகிறது.
* ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘கௌரவம்’ படத்தை தயாரித் திருக்கும் பிரகாஷ்ராஜ், இந்தப் படத்தை அமெரிக்கா, இந்தியா தவிர மற்ற நாடுகளில் இணையதளத்தில் பார்க்கும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறாராம். இதற்காக
5 டாலர் அதாவது 270 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.

Comments
Post a Comment