Sunday,28th of April 2013
சென்னை::விரைவில் திரைக்கு வரத் தயாராகி வரும் படம் மடிசார் மாமி. இந்த படத்துக்கு முதலில் மடிசார் மாமியும் மதன மாமாவும் என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். அதையடுத்து மதன மாமா என்ற பெயர் படத்தின் இமேஜை கெடுத்து விடும் என்று நினைத்து மடிசார் மாமி என்று மாற்றினார்கள். இதன் ஆடியோ விழா முடிந்து விட்ட நிலையில், இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பிரமாணர்கள் சங்கம், படத்தை வெளியிடும் முன்பு எங்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும் என புகார் அளித்திருக்கிறார்களாம். அதனால் இதுவரை படத்துக்கு எந்த ஆபத்தும் எழவில்லை, சத்தமில்லாமல் படத்தை ரிலீஸ் பண்ணி விடலாம் என்று நினைத்திருந்த படக்குழு இந்த திடீர் பிரச்னையில் அதிர்ச்சியடைந்திருக்கிறது
Comments
Post a Comment