Friday,26th of April 2013
சென்னை::நடிகை, ஷ்ரேயாவை, இப்போதெல்லாம், தமிழில், அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனால், தெலுங்கில் அம்மணி, ரவுண்டு கட்டி அடிக்கிறார். அதுவும், சாதா ரவுண்டுஅல்ல, அதிரடியான கவர்ச்சி ரவுண்டு. விரைவில் வெளியாகவுள்ள, "பவித்ரா என்ற படத்தில், கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம். ஷ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம், தெலுங்கின் இளம் நடிகரான, ஆதிக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஏற்கனவே, தெலுங்கில், இவர் நடித்த இரண்டு படங்களும், அவுட். இதனால், தற்போது நடித்துள்ள, "சுகுமாருடு என்ற படத்தை, பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இதில், பெரிய சோகம் என்னவென்றால், "
பவித்ரா வெளியாகும் அதேநாளில் தான்,"சுகுமாருடு படமும் வெளியாகிறது. ஸ்ரேயாவின் கிளாமர் சுனாமியில், "சுகுமாருடு சுக்கு நூறாகி விடுமோ, என, பீதி அடைந்துள்ளாராம், அந்த இளம் நடிகர்.
Comments
Post a Comment