பிரகாஷ்ராஜுடன் விளையாடிய ஸ்ரீதேவி!!!

Monday,22nd of April 2013
சென்னை::தலைப்பைப் படித்தால் என்னென்னவோ கற்பனைகள் தோன்றும். ஆனால் மேட்டர் சிம்பிள்.
 
விஜய் தொலைக்காட்சி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை எப்படியும் ஹிட்டாக்குவது என்ற முடிவில் இருக்கிறது. ஒரு கோடி தந்தால் போதாது, விளையாடுவது விஐபி யாக இருக்க வேண்டும் என்ற முடிவில் கமல்ஹாசன், அரவிந்த்சாமி என பலரை பிரகாஷ்ராஜுடன் ஆட வைத்தது. அதில் கமல்ஹாசனின் எபிசோட் சூப்பர்ஹிட்.
 
தற்போது ஸ்ரீதேவியை வைத்து ஒரு ஆட்டத்தை ஷுட் செய்திருக்கிறார்கள். விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த ஆட்டத்தை எப்படி பிரமோட் செய்வது, ஹிட்டாக்குவது என தலையை புண்ணாக்கி யோசித்து வருகிறார்கள்.
 
கோடிகளில் புரள்கிறவர்களை அழைத்து ஒரு கோடி புரோகிராமில் நடிக்க வைப்பது என்னங்க நியாயம்...?

Comments