Monday,22nd of April 2013
சென்னை::குமரி மாவட்டத்தில் அப்பா தேர்தலில் நின்றிருந்தால் ஜெயித்திருப்பார். இளைய திலகம் பிரபு இதனை தெரிவித்தது நாகர்கோவிலில்
கும்கி படத்தின் 125 வது வெற்றிவிழா நாகர்கோவில் பயோனியர் முத்து திரையரங்கில் நடந்தது. பிரபு, விக்ரம் பிரபு, பிரபு சாலமன், லிங்குசாமி, லட்சுமி மேனன்... என படத்தில் பணிபுகுசிந்த அனைவரும் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் ரஜினி, கமலைவிட அதிக ரசிகர்கள் ஒருகாலத்தில் பிரபுக்கு இருந்தனர் என்பது ஆச்சரியமாக இருக்கும்.
ஆனால் உண்மை. சின்னதம்பி வந்த காலத்தில் நாகர்கோவிலில் பிரபுதான் கிங். அவரின் 100 வது படம் ராஜகுமாரன் தமிழகமெங்கும் சுமாராகப் போன போது நாகர்கோவிலில் உள்ள மினி சக்ரவர்த்தி திரையரங்கில் மட்டும் நாறு நாட்களை வெற்றிகரமாக கடந்தது. இதற்கு காரணம் சிவாஜி கணேசன். அவரது ரசிகர்கள் அப்படியே பிரபுக்கு ஆதரவு தந்ததால் கிடைத்த வெற்றி அது. அதனால்தான் பிரபு, அப்பா நாகர்கோவிலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்றார்.
ஓகே, இனி நிகழ்காலத்துக்கு வரலாம். நாகர்கோவிலில் நடந்த கும்கி வெற்றிவிழாவில் அனைவரும் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். காரணம் ரசிகர்களின் பேராதரவு. கும்கியைப் போன்ற நல்ல படங்களை தொடர்ந்து தருவேன் என்று வாக்குறுதி தந்தார் விக்ரம் பிரபு. விழாவில் பேசிய லட்சுமி மேனன் சொன்ன ஒரு தகவல் செம சுவாரஸியம்.
லட்சுமியின் பாட்டி தீவிர சிவாஜி ரசிகராம். ஒரு படம் விடமாட்டாராம். பாட்டிக்குப் பிடித்த நடிகரின் பேரனுடன் நடிப்போம் என்று லட்சுமி மேனன் கனவிலும் நினைத்ததில்லையாம்.
நாங்ககூட உங்களுக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் இப்படியொரு கனெக்ஷன் இருக்கும்னு நினைக்கலைங்க.
Comments
Post a Comment