Tuesday,2nd of April 2013
சென்னை::தற்போது ஹன்சிகாவின், கைவசம், "சிங்கம்-2, மற்றும் வாலு, வேட்டை மன்னன், வாலிபன், தீயா வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, சேட்டை என்று பல படங்கள் உள்ளன. இப்படி அவரதுகால்ஷீட் டைரி நிரம்பி வழிவதைப் பார்த்து சிலர், திருஷ்டி போடுகிறார்களாம். அவர்களிடம்," இந்த இடத்திற்கு வர, நான் எத்தனை வருஷமா, சினிமாவில் போராடியிருக்கேன் தெரியுமா என்று தான் சந்தித்த போராட்டங்களை ஒன்றுவிடாமல் ஒப்புவிக்கிறாராம் ஹன்சிகா.அதோடு, இப்படி வேண்டப்பட்டவர்களே தன் மீது கண் வைப்பதால், தன் மார்க்கெட் தடுக்கி விழுந்து விடக்கூடாது என்பதற்காக, தினமும் படப்பிடிப்பு முடிந்து, வீட்டுக்கு வந்ததும் இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு, அம்மாவை தனக்கு திருஷ்டி சுத்தி போடச் சொல்கிறாராம் ஹன்சிகா.
Comments
Post a Comment