Tuesday,30th of April 2013
சென்னை::M.A.ராமகிருஷ்ணன் –ஆத்மியா நடிக்கும்
போங்கடி நீங்களும் உங்க காதலும்
பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் M.A.ராமகிருஷ்ணன்.
கதாநாயகிகளாக மனம்கொத்திப் பறவை படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
மற்றும் ஜெயபிரகாஷ்,இமான் அண்ணாச்சி,சாமிநாதன்,சென்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ; M.V.பன்னீர்செல்வம்
இசை ; கண்ணன்
பாடல்கள் ; அண்ணாமலை
எடிட்டிங் ; வசந்த் அய்யப்பன்
கலை ; மோகன்
நடனம் ; பாஸ்கர்
தயாரிப்பு நிர்வாகம் ; மார்ட்டின்-பாண்டியன்
தயாரிப்பு மேற்பபார்வை ;செந்தில்
தயாரிப்பு ; கே.ஆர்.கண்ணன்.
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி நடிக்கும் M.A.ராமகிருஷ்ணனிடம் படம் பற்றி கேட்டோம். இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு.எது காதல்?எது நட்பு? அதுக்கான லிமிட் என்ன ஒன்றுமே புரியல? பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்றாங்க ..பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்றாங்க அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் தான் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்கிறார் M.A.ராமகிருஷ்ணன்..
போங்கடி நீங்களும் உங்க காதலும்…’ ம்ம்ம்…இதான் படத்தோட தலைப்பு.. காதலைக் கொண்டாடன காலம்லாம் போய், இப்ப ஏமாத்தற காதலுக்கு நாம வந்து நின்னுருக்கோம்னு சொல்ல வர்றாரு இந்த படத்தோட இயக்குனர் எம்.ஏ. ராமகிருஷ்ணன்…
‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’, படத்தின் மூலமா ஹீரோவா அறிமுகமானவர் ராமகிருஷ்ணன்.
இந்தப் படம் மூலமா இயக்குனராகவும் அறிமுகமாகி ஹீரோவாவும் நடிக்கிறாரு. ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல ஹீரோயினா நடிச்ச ஆத்மியா இந்த படத்துல ஹீரோயினா நடிக்கிறாங்க. இன்னொரு ஹீரோயினா காருண்யா நடிக்கிறாங்க.
படத்தைப் பற்றி ராமகிருஷ்ணன் என்ன சொல்றாருன்னா “இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு. எது காதல்? எது நட்பு? அதுக்கான லிமிட் என்னன்னு ஒன்னுமே புரியல? பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்தறாங்க ..பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்றாங்க ? அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் தான் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’.
எல்லாம் சரிங்க, ஆனால் டைட்டிலைப் பார்த்தால் பொண்ணுங்கள திட்டற மாதிரியும், வம்புக்கு இழுக்கற மாதிரியும் இல்ல இருக்கு…
Comments
Post a Comment