Saturday,6th of April 2013
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்தின் அடுத்த படமான
'வலை' வெளியாக இருப்பதோடு, அஜீத் ரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க இருப்பது தான் அது. இதில், அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், தற்போதுள்ள சிறந்த காமெடி நடிகர் சந்தானம் மற்றும் விதார்த், பாலா, முனிஷ், புது முகம் சுஹேல், ரமேஷ் கண்ணா, அப்புக் குட்டி, நாடோடிகள் அபிநயா, நந்தகி, வித்யு லேகா மற்றும் தேவ தர்ஷிணி ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். மேலும், இதில் நல்ல கலைஞர்கள் நடிப்பதால் நல்ல ஒரு பொழுபோக்கு படமாகவும் இது அமையும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்துடன் தேவி ஸ்ரீ பிரசாத்-இசை, வெற்றி- ஒளிப்பதிவு, சில்வா- சண்டை பயிற்சி, கதை- பூபதி ராஜா, வசனம்-பரதன்.
Comments
Post a Comment