சினி பாப்கார்ன் - ஒரு கிஸ்ஸர், ஒரு போஸ்டர், சில லூசர்ஸ்!!! க்ளீன் போல்டு ஹன்சிகா!!!

Saturday,20th of April 2013
சென்னை::நடிகைகளுக்கும் கி‌ரிக்கெட் நட்சத்திரங்களுக்குமான உறவு கி‌ரிக்கெட் கண்டு பிடிக்கப்பட்ட போதே ஆரம்பமானது. அதென்னவோ மட்டையடி வீரர்கள் என்றால் நடிகைகளுக்கு ஒரு ஸ்பெஷல் விருப்பம். சமீபத்தில்கூட அக்ரமும், சுஷ்மிதா சென்னும் திருமணம் செய்யப் போவதாக ஊடகங்கள் போட்டுத் தாக்கின. லட்சுமிராய், டோனி நட்பு பலமுறை ஸ்கூப் நியூஸானது அறியாததல்ல.

போதும்பா மேட்டருக்கு வான்னு நீங்க சொல்றது கேட்கிறது. கி‌ரிக்கெட் பற்றி பேசினாலே நாலு பாய் ஃ‌ப்ரெண்டை கோர்த்துவிடுகிற யுகத்தில் ஹன்சிகா மோத்வானி தேடிப் போய் கெவின் பீட்டர்சனை சந்தித்து கடலைப் போட்டிருக்கிறார். கெவின் பீட்டர்சன் என்றால் ஹன்சிகாவுக்கு அவ்.....ளோ இஷ்டமாம். ஹன்சிகாவின் ஆட்டோகிராஃபுக்கு ஆயிரம் பேர் க்யூ நிற்க அவரோ பீட்டர்சனின் பக்கத்தில் வழிந்து கொண்டிருக்கிறார். பார்த்து மேடம்... T20 மாதி‌ரி மீடியா அடிச்சு வெளுத்திடப் போறாங்க.

Comments