நடிகை ரேவதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு!!!

Tuesday,23rd of April 2013
சென்னை::நடிகை ரேவதி- சுரேஷ்மேனன் ஆகியோரது மனம்மொத்த விவாகரத்து மனுவுக்கு ஏற்பு தெரிவித்து அவ் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம். நடிகை ரேவதி மண்வாசனை என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற  பல படங்களிலும். பல முன்னணி இயக்குனர்கள் இயக்கிய  பல படங்களிலும் நடித்தவர் மேலும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களோடு கதா நாயகியாக நடித்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு சுரேஷ்மேனன் இயக்கி கதாநாயகனாக நடித்த ``புதிய முகம்'' என்ற படத்தில் அவர் கதாநாயகியமாக நடித்தார். அதன்   அதன் பிறகு இருவரும் நண்பர்களாக பழகி பிறகு காதலர்களாக மாறி திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கடந்த 10 வருடங்களாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மத்தியில் அவர்கள் இருவரும் மனப்பூர்வமாக மனமொத்த நிலையில் பிரிந்து வாழ சம்மந்தம் தெரிவித்து தங்களுக்கு பரஸ்பர விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தனர். 
 
இந்த மனு மீதான விசாரணை முதலாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராஜாசொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது அப்பொழுது நீதிபதி தனது தீர்ப்பில் இருவருமே மனம்மொத்து பரஸ்பர முறையில் தங்களுக்கு விவாகரத்து வழங்க கோரியுள்ளனர். இதற்கு மேலும் அவர்கள் இருவரையும் இணைத்து வைக்க சாத்தியமில்லை என்று நீதிமன்றம் கருதிகிறது. என்று அவர்களது திருமனத்தை ரத்து செய்துகிறேன் எனவே உத்தரவு வழங்கினார்.

Comments