நடிகை ரேவதி,சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கு : தீர்ப்பு ஒத்தி வைப்பு!!!

Monday,8th of April 2013
சென்னை::திருமணத்திற்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பரஸ்பரமாக பிரிந்து செல்வதற்கு இரண்டு பேரும் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இரண்டு பேரும் சேர்ந்து 1.10.2012 அன்று பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார்.

இரண்டு பேரும் மார்ச் 31-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அன்று ஆஜரானார்கள். பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை::1983ஆம் ஆண்டு வெளியான 'மண் வாசனை' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ரேவதி, தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவரும், இயக்குநர் சுரேஷ் மேனனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

Comments